நபரொருவரின் காதுக்குள் உயிருடன் வாழ்ந்து வந்த பல்லி!

Thursday, 24 August 2017 - 10:29

%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%21
சீனாவில் வசிக்கும் ஒருவரின் காதிற்குள் உயிரோடு ஒரு பல்லி வாழ்ந்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில், சீனாவில் வசிக்கும் ஒருவர், காலை எழுந்தது முதல் தனது காதில் ஏதோ ஊர்வதாக உணர்ந்துள்ளார்.

நேரம் செல்ல செல்ல காது வலி, தலைவலியால் துடித்துள்ளார். எனவே, மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது அவரது காதை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
காரணம், அவரின் காதில் உயிரோடு ஒரு பல்லி இருந்துள்ளது. அந்த பல்லி அங்கும் இங்கும் நகர முயன்ற போதுதான் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
 
அதன் பின் அந்த பல்லியை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். இதில், அந்த பல்லிக்கு வால் இல்லை. அவரின் காதுக்குள் செல்லும் போதே வால் இல்லாமல் பல்லி சென்றதா, இல்லை அவரது காதிலேயே வால் தங்கி விட்டதா எனத் தெரியவில்லை.
 
இதற்கு முன் மனிதர்களின் காதில் சிலந்தி, கரப்பான் பூச்சி ஆகியவை சென்று, அதை மருத்துவர்கள் வெளியே எடுத்த செய்திகளை படித்திருக்கிறோம்.

ஆனால், ஒருவரின் காதில் இருந்து உயிரோடு பல்லி வெளியே எடுக்கப்பட்ட சம்பவம் தற்போதுதான் நடந்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips