Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Wednesday, 13 September 2017 - 17:30
இரத்தினபுரி நகரில் அழுது புலம்பிய மாணவரின் சோகக்கதை (காணொளி)
18,967

Views
தனது சித்தப்பா குடித்து விட்டு வந்த தன்னை மற்றும் தனது தாய் , தந்தையை தாக்குவதாக தெரிவித்து பாடசாலை மாணவரொருவர் இன்று இரத்தினபுரி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

காட்போட் அட்டையொன்றில் தனது குடுபத்திற்கு தனது சித்தப்பாவால் நேர்ந்துள்ள துன்பங்களை குறிப்பிட்டு அவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்போது , தன்னை பரீட்சை எழுத விட போவதில்லை எனவும் , காவற்துறையில் பிடித்துக் கொடுக்க போவதாகவும் அவரது சித்தப்பா அச்சுறுத்தியுள்ளதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட தனது குடும்பத்தை தனது சித்தப்பா மற்றும் மூன்று சித்திமார்கள் தொந்தரவு செய்வதாக தெரிவித்த மாணவர், எம்பிலிப்பிடிய காவற்துறையில் இது தொடர்பில் முறைப்பாடு செய்த போதும் எமக்கு நியாயம் கிடைக்க வில்லை என தெரிவித்திருந்தார்.

இரத்தினபுரி நகரின் கடிகார கோபுரத்திற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்ட இந்த மாணவர் , காவற்துறை மா அதிபரிடமும் உதவி கோரியிருந்தார்.

பின்னர் , அங்கிருந்த நபர்கள் சிலர் குறித்த மாணவரை இரத்தினபுரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,058 Views
6,503 Views
1,465 Views
13,119 Views
90 Views
9,750 Views
Top