Hirunews Logo
%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+...+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D++
Wednesday, 13 September 2017 - 19:51
ஹப்புத்தளை மருத்துவமனையில் பதற்றநிலை ... பெண்ணொருவர் மரணம்
3,351

Views
ஹப்புத்தளை மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

மருத்துவர்களின் கவனயீனம் காரணமாகவே, மரணம் நிகழ்ந்தாக, மரணித்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஹப்புத்தளையைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயின் மரணம் தொடர்பிலேயே இந்தக் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவரின் கணவரின் சகோதரரான அக்ரம் எமது செய்திச் சேவையிடம் வினவியது.

இதேவேளை, மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு ஹப்புத்தளை மருத்துமனையிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், மருத்துவர் என்ற அடிப்படையில் தமது பணிகளை முன்னெடுத்ததாக குறிப்பிட்டார்.

குறித்த பெண் மரணித்திருந்தாகவும், மரணித்த பின்னர் உயிர்கொடுக்க தம்மால் முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளித்தபோதும், அதனை ஏற்றுக்கொள்வது மருத்துவ சேவையில் குறைப்பாடு உள்ளதாக தெரிவித்து அவர்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

அத்துடன், ஊவா மாகாணத்தில் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் தாம் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும் அந்த மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,728 Views
11,889 Views
926 Views
4,062 Views
132 Views
5,632 Views
Top