Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Wednesday, 13 September 2017 - 21:00
பாரவூர்தி மரமொன்றில் மோதி விபத்து - சிறுவன் பலி
5,675

Views
லுனுகம்வெஹர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிறிய ரக பாரவூர்தியொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தலவாக்கலை நகரில் இன்று மாலை மஞ்சல் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ரக வாகனம் ஒன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனையடுத்து குறித்த வேன் ரக வாகம் தப்பி சென்றுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 67 வயது மதிக்க தக்கவர் என தெரியவந்துள்ளது.


   
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,728 Views
11,889 Views
926 Views
4,062 Views
132 Views
5,632 Views
Top