Hirunews Logo
%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%3B+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Sunday, 17 September 2017 - 20:29
ரோஹிங்கியா முஸ்லிம் படுகொலை ; மியன்மாருக்கு இறுதி எச்சரிக்கை
8,579

Views
ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தொடர்ச்சியாக மியன்மாரில் இருந்து வெளியேறுவதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மியன்மார் தலைவர் அவுன் சாங் சூகி துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் இருந்து அவர் தவறும் பட்சத்தில், அது பாரிய மனித படுகொலைகளுக்கு இட்டுச்செல்லும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியான மனிதாபிமானமற்ற செயல்கள் தொடரும் பட்சத்தில் இன மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தானத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் ஆன்டோனியோ குட்றஸ்  இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

அவுங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி வலியுத்தல் இதுவாக இருக்கக்கூடும் எனவும் அவர் தமது செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற அவுங் சாங் சூகி பல வருடங்களாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், நிவ்யோர்கில் நடைப்பெறும் ஐக்கிய நாடுகளின் பொது சபையில் இவர் பங்கு கொள்ள மாட்டார் என பல தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,996 Views
5,897 Views
844 Views
12,464 Views
1,213 Views
8,796 Views
Top