Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Sunday, 17 September 2017 - 18:31
புதுக்குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது உடலம் மீட்பு (படங்கள்)
153

Views

புதுக்குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலை வளாகத்தில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டுவருகின்றது.

இந்த கட்டத்திற்கான பொருட்களை களஞ்சியப்படுத்தும் களஞ்சிய அறை ஒன்றும் அதனை பாதுகாக்க காவலாளி ஒருவரும் இருந்துள்ளார்கள்.

10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 72 அகவையுடைய குமாரசாமி இராசலிங்கம் என்பவரே காவலாளியாக கடமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் நேற்று இரவு வழமைபோன்று தனது பணிகளை முடித்துவிட்டு இரவு 9.30 மணியளவில் சில உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். "நாளை என்னை பாக்க எல்லாரும் வருவியள் என்று".

இந்த சம்பவத்தினை தொடர்ந்து இரவு 10.00மணியளவில் இவரது உறவினர் சிலர் இவரை சென்றுபார்த்தபோது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவர் அவரது கைப்பட கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு காவற்துறையில் முறையிட்டுள்ளார்கள். சம்பவ இடத்திற்கு மரணவிசாரணை அதிகாரி சற்குணராசா காலை 10.00 மணியளவில் காவற்துறையினருடன் வருகை தந்து இவரது மரணம் குறித்து விசாரணை செய்துள்ளார்.

பின்னர் இவரது உடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் :- சண்முகம் தவசீலன்

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,996 Views
5,897 Views
844 Views
12,464 Views
1,213 Views
8,796 Views
Top