Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+++
Sunday, 17 September 2017 - 18:34
முல்லைத்தீவில் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல்
202

Views

முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் மூன்று  பொலிஸார் மீது   கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 2பெண்கள் உட்பட பதினாறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று  பொலிஸாரும்  முல்லைத்தீவு – வெலியோயா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் போதைப்பொருள்  விற்பனை   செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பொலிஸார்  சுற்றிவளைப்பில் ஈடுபட்டதுடன், போதைப்பொருள் விற்பனை செய்த நபரை கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து போதைப்பொருள் விற்பனை செய்த நபரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மூன்று பேர் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று  பொலிஸாரும்  முல்லைத்தீவு வெலியோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 16 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
News Image
Hiru News Programme Segments
3,440 Views
5,711 Views
303 Views
672 Views
19 Views
30,062 Views
Top