Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Sunday, 17 September 2017 - 19:31
பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மின்சக்தி அமைச்சரின் கோரிக்கை
6,294

Views
மின்சார சபை பணியாளர்களின்  போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாக உதவி மின்சார பொறியியலாளர்கள் மற்றும் மின்சார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அவர்களும் குறித்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார்.

மின்சார சபை உயர் கட்டுப்பாட்டாளர்களுக்கு வேதனம் வழங்குவதில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, பணியாளர்கள்  தொழிற்சங்கள் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மின்சார பணியாளர்களின் 2 நாள் போராட்டம் வேதனத்துடனான விடுமுறையாக கருதப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அமைச்சரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிவிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் சேவையாளர்களுக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ள பணியாளர்களையும் நாளை சேவைக்கு வருகைத்தரும் படியும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,674 Views
11,475 Views
483 Views
3,538 Views
116 Views
5,074 Views
Top