Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 17 September 2017 - 19:29
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் மரணம் - ஹப்புத்தலை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்
6,541

Views
ஹப்புத்தலை – பங்கட்டி மருத்துவமனையில் அண்மையில் இடம்பெற்ற மரணம் ஒன்றில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஹப்புத்தலை பிரதேச மக்கள், முன்னாள் நகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பங்கட்டி மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 37 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் உயிரிழந்தார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தே மக்களால் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
குறித்த பிரச்சினை தொடர்பில் எமது செய்தி பிரிவு பங்கட்டி மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு வினவ முயற்சித்த போதிலும் அது பலன்தரவில்லை.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்தகுமார், இந்த பிரச்சினைக்கான நீதியை பெற்று தருவதாக உறுதியளித்தார்.

இதேவெளை , இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா மற்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா ஆகியோருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று கன்தளாய் பகுதியில் இடம்பெற்றது.

அவர்கள் பௌத்த மதகுருமாருக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் கருத்துக்களை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,996 Views
5,897 Views
844 Views
12,464 Views
1,213 Views
8,796 Views
Top