எதிர்வரும் 36 மணித்தியாலங்கள்... பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன்!!

Monday, 18 September 2017 - 17:51

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+36+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%21%21
நாளைய தினம் நாட்டின் ஊடாக (விசேடமாக மலையகத்திலும் , வடக்கு , வடமத்திய , கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ) இடைக்கிடையில் ஓரளவு கடும் காற்று மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் இடைக்கிடையில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் போன்று காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 4 மணி தொடக்கம் எதிர்வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கையை வௌியிட்டு , காலநிலை அவதான நிலையம் இதனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , நாட்டின் வடகிழக்கு கடற் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 70-80 வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தை வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips