குழந்தையை உணவுக்கு எடுத்த விசித்திர நாய் தொடர்பில் சந்தேகம்!!

Monday, 18 September 2017 - 18:41

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21%21
வீட்டின் பிரதான அறையில் உறங்கிக்கொண்டிருந்த போது , நாய் ஒன்றினால் கடித்து குதறப்பட்ட நிலையில் உயிரிழந்த குழந்தையின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன.

மிகவும் ஏழ்மையான இந்த குடும்பத்தில் குழந்தையின் சடலத்தை கூட வைக்க போதிய வசதியின்மையால் அவரின் உறவினரொருவரின் வீட்டில் குழந்தையின் உடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிறந்து 7 நாட்களே ஆன கைக்குழந்தையொன்று நாய் கடித்து குதறியதில் உயிரிழந்த சம்பவமொன்று ஹபரணை - நாமல்புர - ஆசிறிகம பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.

நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் தாய் குழந்தையை வீட்டின் தரையில் உறங்கச் செய்து விட்டு நுளம்பு வலையால் குழந்தையை மூடிவிட்டு சமயலறையில் சமைத்துக்கொண்டிருந்துள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் , அங்கு வந்த நாயொன்று குழந்தையை  கடித்து குதறியுள்ளது.

பின்னர் , படுகாயமடைந்த குழந்தை ஹபரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை தம்புள்ளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும் , குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தாயாருக்கு வயது 24 ஆகும்.

இவருக்கு 6 மற்றும் 2 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் , குழந்தையின் இறுதிக்கிரியைகள் இன்று மதச்சடங்குகள் நிறைவேற்றப்பட்ட ஆசிறி பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அந்த வீட்டின் அயல் வீட்டில் வசித்து வரும் பெண்ணொருவர் இவ்வாறு கூறினார்.

குழந்தையின் தாய் கதறிய படி வீட்டில் இருந்து வௌியே ஓடி வந்த நிலையில் , அப்போது பழுப்பு (பிரவுன்) நிறத்தில் உடலில் மயிர்கள் கொட்டப்பட்ட நாயொன்று தனது வீட்டை நோக்கி வந்ததாகவும் , இதற்கு முன்னால் இதுபோன்ற நாயை இந்த பிரதேசத்தில் கண்டதில்லை எனவும் அந்த பெண் தெரிவித்திருந்தார்.

இதேவேளை , பிரதேசவாசிகள் சிலர் வேட்டைக்கு செல்லவதற்காக வேட்டை நாய்களை வளர்ப்பதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips