யானை தாக்கி குடும்பஸ்தர் பலி - பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Wednesday, 20 September 2017 - 17:56

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி 03 ஆம் குளனி லிங்க நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாய்கிழமை (19) மாலை யானை தாக்கி உயிர் இழந்துள்ளார்.

உயிர் இழந்தவரின் சடலம் தற்போது சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 05 பேர் இப்பகுதியில் யானை தாக்கி உயிர் இழந்துள்ளனர்.

இதனால் தமக்காக காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டுமென தெரிவித்து சேருநுவர பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (20) காலை பிரதேச மக்களால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனால் திருகோணமலை மட்டக்களப்பு வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் தாமதமாகியது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்திற்கு சேருநுவர பிரதேச செயலாளர் பீ.ஆர்.ஜயரட்ண வருகை தந்து தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் யானை தாக்குதல் இடம் பெற்று வருகின்ற சம்பவம் தொடர்பில் தான் உரிய அதிகாரிகளிடம் பேசி நல்லதொரு முடிவினை பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.









Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips