லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட பிணையில் விடுதலை

Wednesday, 20 September 2017 - 19:17

%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
 
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று அவர்களுக்கு இந்தப் பிணை அனுமதி வழங்கப்பட்டது.
 
இதற்கமைய, குறித்த இருவரும் தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும், 10 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதியளித்தார்.
 
அத்துடன், அவர்களின் வெளிநாட்டு பயண அனுமதிப் பத்திரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
 
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபாவை செலவுசெய்து, பிக்குகளுக்கான சில் ஆடை விநியோகத்தில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
 
இதற்கமைய, குறித்த இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டைனை விதிக்கப்பட்டது.
 
அத்துடன், தலா 20 லட்சம் அபராதமும், 50 மில்லியன் நட்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறபபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips