Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9
Friday, 13 October 2017 - 7:32
தாய்வான் வங்கி பணமோசடி தொடர்பில் மேலும் பல ரகசிய தகவல்கள் வெளிவந்துள்ளன
2,688

Views
தாய்வான் - ஃபா ஈஸ்ட்ரன் வங்கியில் இணையத்தின் ஊடாக பணமோசடி செய்த சம்பவம் தொடர்பில் மேலும் பல ரகசிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
குற்றபுலனாய்வு திணைக்கள பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
இணைய வழி தாக்குதல் மூலம், தாய்வானிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்ட ஆயிரத்து 94 லட்சம் ரூபாய் பணம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
கணினி வைரஸ் ஒன்றை உட்செலுத்தி தாய்வானின் பா- ஈஸ்ட்ரன் வங்கி கணக்குக்குள் பிரவேசித்து 60 மில்லியன் டொலருக்கு அதிகமான தொகை வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டிருப்பதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
அவற்றுள் 1.3 மில்லியன் டொலர் பணம் இலங்கைக்கு அனுப்பபட்டுள்ளது.
 
அந்த தொகையில் 300 லட்சம் ரூபா பணம் ஜே.சீ நம்முனி என்ற சந்தேகத்துக்குரியவரின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
 
அத்துடன் 150 லட்சத்தை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ரகசிய காவற்துறையினர் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
 
இதுதொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலீல முனசிங்க உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,375 Views
8,568 Views
280 Views
12 Views
453 Views
13,042 Views
Top