Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 13 October 2017 - 8:34
தலிபான் தீவிரவாதிகள் தடுத்து வைத்திருந்த வட அமெரிக்க குடும்பத்தை மீட்பு
176

Views
ஆப்கானிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் தடுத்து வைத்திருந்த வட அமெரிக்க குடும்பத்தை மீட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
 
ஐந்து பேரைக் கொண்ட வட அமெரிக்கர்களின் குடும்பமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
 
குர்ரம் ட்ரிபல்ட மாவட்டத்துக்கு அருகில் உள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் அவர்கள் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
 
எனினும், குறித்த குடும்பம் தொடர்பான மேலதிக தகவல்களை பாகிஸ்தான் இராணுவம் வெளியிடவில்லை.
 
ஆனால், கனடாவைச் சேர்ந்த ஜோஸுஹா பொய்ல் மற்றம் அவரது மனைவியான அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லன் கொல்மென் ஆகியோர் கடந்த 2012 ஆம் ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டனர்.
 
தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் அவர்கள் மூன்று பிள்ளைகளை பெற்றுள்ளனர்.
 
இந்த நிலையில், அவர்கள் உள்ளிட்ட ஐந்து பேரையும் தற்போது தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து விடுவித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
494 Views
2,501 Views
2,869 Views
14,705 Views
957 Views
16,159 Views
Top