Hirunews Logo
7500+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Friday, 13 October 2017 - 10:13
7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது
676

Views

சுமார் 7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் அட்டன் டிக்கோயா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அட்டன் காவற்துறையால் நேற்று மாலை 6.30 மணியளவில் அட்டன் – டிக்கோயா பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து டிக்கோயா பட்டல்கலை பகுதிக்கு கொண்டு செல்லும் போது காவற்துறையினரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், வாகனத்தையும், சந்தேக நபர்களையும் அட்டன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அட்டன் காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,362 Views
7,795 Views
233 Views
3,548 Views
175 Views
34,635 Views
Top