Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
Friday, 13 October 2017 - 10:46
இரப்பர் அழிப்பானால் நேர்ந்த விபரீதம்..! பதுளை பாடசாலையில் அதிர்ச்சி சம்பவம்
14,344

Views
பதுளையில் இருபாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மாணரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

அவரின் முதுகுப்பகுதி வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வலய கல்வி அலுவலகத்தால் பதுளை ராஹுல வித்தியாலயத்தின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

போட்டிப் பரீட்சையில் 40 க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்காக இந்த  கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரப்பர் அழிப்பானால் எறிந்து மாணவர்கள் விளையாடியுள்ள நிலையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது , இரண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டுள்ளதோடு , அதில் ஒரு மாணவர் தாள் வெட்டி மூலம் மற்றைய மாணவரின் முதுகுப்பகுதியில் வெட்டியுள்ளார்.

காயமடைந்த மாணவரின் முதுகுப்பகுதியில் சுமார் 8 அங்குலம் நீளத்திற்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில ்காயமடைந்த மாணவர் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு , சந்தேகநபரான மாணவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
494 Views
2,501 Views
2,869 Views
14,705 Views
957 Views
16,159 Views
Top