Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Friday, 13 October 2017 - 13:55
காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்
5,110

Views
மழையுடனான காலநிலை தொடரும் 

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த திணைக்களத்தின் கடமை நேர பணிப்பாளர் அதுல கருணாரத்ன எமது செய்தி பிரிவிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வானம் மேகமூட்டதுடன் காணப்படுவதோடு, பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
6,007 Views
14,004 Views
608 Views
6,899 Views
386 Views
8,417 Views
Top