Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+
Friday, 13 October 2017 - 14:52
முன்னாள் ஜனாதிபதிக்கு தொகுதி அமைப்பாளர் பதவி
4,286

Views
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின், அத்தனகலை தேர்தல் தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திர கட்சித் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

முன்னதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே நீக்கப்பட்டார்.

அத்துடன், மதுகம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சில புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவின் ஆனமடுவ தொகுதி அமைப்பாளர் பதவிக்கு வடமேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர், கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் ஆசிரியை ஒருவரை பலாத்காரமாக மண்டியிட வைத்தது தொடர்பாக புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இரண்டு வருட ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டவர் ஆவார்.

இதேவேளை, யட்டியாந்தோட்டை தொகுதியின் அமைப்பாளராக, ஹர்ஷ சிம்பலபிட்டியவும், ரத்தோட்டை தொகுதி அமைப்பாளராக சிந்தன ஏக்கநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் பிரதி அமைச்சர் ரோஹண திஸாநயக்க பதவி விலகியதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மாத்தளை தொகுதிக்கு உஜித் அனுராதவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்ணி, புத்தளம், கேகாலை, காலி மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட அமைப்பளார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் சில தொகுதிகளுக்கு அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலதிக விபரம் கீழே..






    
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,163 Views
10,063 Views
870 Views
6,053 Views
258 Views
38,096 Views
Top