மேல்நோக்கி பாயும் நீர்வீழ்ச்சி

Thursday, 19 October 2017 - 12:27

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
சீனாவில் ஏற்பட்டுள்ள புயலால் நீர்வீழ்ச்சி ஒன்று பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி செல்லும் காட்சி தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.

சீன கடற்பகுதியில் கனூன் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது.

புயலால் ஹொங்கொங் வழியாக மக்காவ் மற்றும் அதன் அருகில் இருக்கும் தீவுகளுக்கு செல்லும் சில விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் தைவான் மற்றும் சீனாவிற்கு செல்லும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

தைவான் மலைப்பகுதியில் கனூன் புயல் காரணமாக நீர்வீழ்ச்சி ஒன்று உருவானது.

ஆனால் அந்த அருவி கீழ்நோக்கி பாயாமல் ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கி பாய்ந்தது.

இந்த காணொளி தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips