இலங்கையில் விசர் நாய் கடிக்கு உள்ளான பிரான்ஸ் நாட்டு சிறுவன் மரணம்

Friday, 20 October 2017 - 13:19

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையில் விசர் நாய் கடிக்கு உள்ளான பிரான்ஸ் நாட்டு சிறுவன் ஒருவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பிரான்ஸின் ரொன்ய் என்ற இடத்தில் வசிக்கும் இந்த சிறுவன், கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோருடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது திக்வளையில் வைத்து தெருநாய் ஒன்று அவரின் காலை கடித்துள்ளது.

எனினும் இதனை சிறுவனின் குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அவர்கள் உரிய சிகிச்சை பெறாமலேயே பிரான்ஸூக்கு திரும்பினர்.

எனினும் இந்த ஒக்டோபர் மாத முதல் பகுதியில் அவருக்கு விசர் நாய் கடி நோயின் குணங்குறிகள் தென்பட்டன.

மூளையில் தாக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 16 ஆம் திகதியன்று அவர் மரணமானார்.

1924 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸில் உள்ளுரில் விசர் நாய் கடிக்கு எவரும் பாதிக்கப்படவில்லை என்ற நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips