அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்

Sunday, 22 October 2017 - 12:54

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்க அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உடுநுவர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

சுதந்திரம் பெற்றதன் பின்னர் இரண்டு அரசியல் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.

இந்த அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையினர் பங்குகொள்ளவில்லை.

தமிழ் கட்சிகள் அரசியலமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இத்தகைய அரசியலமைப்புக்களால் நாட்டை ஒன்றிணைக்க முடியாது.

தற்போது அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அனைவரினது கருத்துக்களுக்கும் முன்னுரிமை வழங்கி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையில் 70 சதவீதமானோர் பெரும்பாம்மையாகவும் 30 சதவீதமானவர்கள் சிறுபான்மையாகவும் உள்ளனர்.

அந்த சிறுபான்மை மக்களின் நிலைப்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.

அந்த இடத்திலேயே இலங்கை தவறிழைத்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips