தனிநாடு விவகாரம் ; கட்டலோனிய ஜனாதிபதி எதிர்ப்பு

Sunday, 22 October 2017 - 19:56

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%3B+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஸ்பெய்னின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என கட்டலோனிய ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டியமோன்ட் (Carles Puigdemont) தெரிவித்துள்ளார்.
 
அப்படியாக ஸ்பெய்னின் ஆட்சி வரும் பட்சத்தில் அது 1939ஆம் ஆண்டு முதல் 1975 வரையிலான காலப்பகுதியில் ஜென்ரல் ஃபிரான்கோவின்  ஆட்சி காலத்தை விட மோசமானதொரு நிலையை எதிர்நோக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ளார்.
 
கட்டலோனியாவின் தலைவர்களை அகற்றி நாடாளுமன்றத்தை செயலிழக்கும் தன்மையை ஸ்பெய்னின் பிரதமர் திட்டமிட்டுள்ளதாக மரியனோ ரஜ்ஜோஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
அதேவேளை ஸ்பெயினின் அரசியல் யாப்பு நீதிமன்றம் கட்டலோனியாவில் சுதந்திரமான கருத்து கணிப்பு வாக்குபதிவொன்றை மேற்கொள்வதற்கு தடைவிதித்திருந்த போதிலும் வாக்கு பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன.
 
இதனிடையே, கட்டலோனியாவில் உள்ள பிராந்திய தலைநகர் பசிலோனாவில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
 
சுதந்திரத்தை முன்னிருத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டாக பாசிலோனா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips