ஊடகங்கள் தேசிய ஒற்றுமையை இல்லாதொழிக்க முயற்சி -பிரதமர் குற்றச்சாட்டு

Sunday, 22 October 2017 - 20:08

+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
அரசியல் அமைப்பை விமர்சிப்பதன் ஊடாக ஊடகங்கள் தேசிய ஒற்றுமையை இல்லாதொழிக்க முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
 
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்கும் நிகழ்வு இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
 
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
 
கடந்த காலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தற்போது நிதியுதவி அளிக்கப்படுகிறது.
 
இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், அனைவரும் அரசியல் அமைப்பு வேண்டாம் எனவே கூறிவருகின்றனர் என தெரிவித்தார்.
 
அரசியல் அமைப்பில் உள்ளடங்க வேண்டியவற்றை அனைவருக்கும் சுட்டிகாட்ட முடியும்.
 
அதற்கு விளக்கமளிக்கவும் முடியும்.
 
அதனைவிடுத்து அரசியல் அமைப்பை வேண்டாம் என எவ்வாறு கூறமுடியும் எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.
 
இவ்வாறான செயல்கள் மூலம் நாட்டின் பொருளாதாரமே பாதிப்படைகிறது.
 
இந்த பாதிப்பு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவி வரை செல்லும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips