சிறையில் கையூட்டலா? - விசாரணைக் குழு அமைக்கவுள்ள கர்நாடக அரசு

Thursday, 16 November 2017 - 19:30

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%3F+-+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
சிறையில் சலுகைகளை பெறுவதற்காக 2 கோடி இந்திய ரூபாய்களை சசிகலா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு விசாரணைக் குழுவை அமைக்க உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

பெங்களுர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா மற்றும் தெல்கி உள்ளிட்ட கைதிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க சிறைத்துறை அதிகாரி ஒருவர் 2 கோடி கையூட்டல் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை என்றும், சிறையில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் சிறையில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும், கையூட்டல் வாங்கிய விடயம் தொடர்பில், உயர்மட்டக்குழு விசாரணை அறிக்கையில் அதிகமாக குறிப்பிட்டிவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆதாரம் இல்லை என்றாலும், அது குறித்து கையூட்டல் ஒழிப்பு பிரிவினர் தனியாக விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், தனியான விசாரணைக் குழுவொன்றை அமைத்து இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips