சிரியாவிற்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்த ரஷ்யா!

Friday, 17 November 2017 - 19:11

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%21
சிரியாவில் ரசாயன ஆயுதம் பிரயோகிக்கப்பட்டது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் கொண்டு வரப்பட்ட தீர்மான வாசகம் ரஷ்யாவினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
 
சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நடவடிக்கையினை நீடிப்பது குறித்து தாக்கல் செய்யப்பட்ட தீர்மான வாசகம், ரஷ்யாவின் வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிரியாவில் தாக்குதல்கள் ஆரம்பமானதன் பின்னர் 10வது முறையாக ரஷ்யா தனது ஆதரவு நாடுகளுக்காக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் இந்த செயல்பாடு காரணமாக மேலும் ரசாய ஆயுத பிரயோகங்கள் மேற்கொள்ளப்படலாம் என குறித்து ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவர் நிக்கி ஹலே (Nikki ualey) கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த கூற்றை ஐக்கிய நாடுகளின் ரஷ்ய தூதுவர் நிராகரித்துள்ளார்.

கடந்த ஏப்பிரல் மாதம் சிரிய நகர் கான் ஷீக்கோனில் (Khan Sheikhoun) இடம்பெற்ற வாநூர்தி தாக்குதல் ஒன்றின் போது தடைசெய்யப்பட்ட ரசாயம் உபயோகிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த தாக்குதலின் போது 80 இற்கும் அதிகமானவர்கள் ஸ்தலத்திலேயே பலியாகினர்.

அந்த சம்பவம் குறித்து விரிவான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மனித உரிமை சபையினால் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில், சிரிய வான் படைக்கு சொந்தமான ஜெட் ரக வாநூர்தி மூலமே ரசாயன பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, பிருத்தானியா, சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips