இளைஞர் கடத்தல் விவகாரம்: ஹிருனிக்காவின் மெய்பாதுகாவலர்கள் அறுவருக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை!!

Friday, 24 November 2017 - 13:10

%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%21%21
நாடாளுமன்ற உறுப்பனர் ஹிருனிகா பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் மெய்பாதுகாவலர்கள் எட்டு பேரில் 6 பேருக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 12 வருட கடுமையான வேலையுடன் கூடிய கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்கவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தெமடகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்தி தாக்கி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பாரதலக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய , எட்டாவது பிரதிவாதி 18ம் வயதிற்கும் குறைந்த பாடசாலை மாணவர் என்பதால் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாவது பிரதிவாதி அரச சேவையாளர் என்பதால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை.

எனினும் , நட்டஈடாக 75 ஆயிரம் ரூபாவினை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அறுவரில் ஐவருக்கு தலா 33 ஆயிரம் ரூபாய் படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு , பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகளின் போது , ஹிருனிகா தவிர்ந்த அவரது மெய்ப்பாதுகாவலர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் , குறித்த ஆறு ​பேருக்கும் இவ்வாறு இரண்டு வருட ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , ஐந்தாவது பிரதிவாதியான பெண்ணின் கணவருக்கு 10 ஆயிரம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் , நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஜனவரி மாதம் 3ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips