எகிப்து பள்ளிவாசல் தாக்குதல் : பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

Saturday, 25 November 2017 - 8:15

%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%3A+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
எகிப்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிகை 235 ஆக உயர்வடைந்துள்ளது.

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது தீவிரவாதிகள் நேற்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் இந்த தாக்குதலுக்கு இதுவரையில் யாரும் உரிமை கோராத நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எகிப்திய இராணுவம், ஜனாதிபதி மொஹமத் மோர்சியை வீழ்த்தியதையடுத்து, அண்மைக்காலங்களில் ஜிகாதி போராளிகள் அங்கு தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips