Hirunews Logo
28+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Thursday, 07 December 2017 - 17:57
28 வயது இளைஞர் பரிதாபமாக பலி! (படங்கள்)
6,583

Views
மின்சாரம் தாக்கி அம்பலாந்தொட புஹுல்யாய பிரதேசத்தின் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தச்சன் தொழிலில் ஈடுபட்டுள்ள குறித்த இளைஞர் அவரின் வீட்டின் பின்புறத்தில் இவ்வாறு தனது தொழில் நிலையத்தை பராமரித்து வந்துள்ளார்.

இன்று காலை வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரமொன்றில் குறித்த இளைஞர் பணி புரிந்துக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, குறித்த இயந்திரத்திற்கு மின்சாரத்தை வழங்கிய வயரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக குறித்த இளைஞருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து, உயிரிழந்த இளைஞரின் சகோதரி தனது குழந்தையுடன் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது அவரது சகோதரர் அவரது தொழில் நிலையத்தில் இயந்திரம் மீது விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.

அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதை அறியாத குறித்த பெண் அவரை தொட்டுள்ள நிலையில் அவரும் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்..

பின்னர் , அவர் கூச்சலிட்டதை தொடர்ந்து பிரதேசவாசிகள் சம்பவிடத்திற்கு விரைந்து குறித்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எவ்வாறாயினும் , இளைஞர் உயிர் பிரிந்த நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
605 Views
2,904 Views
3,302 Views
15,272 Views
286 Views
16,706 Views
Top