Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
Thursday, 07 December 2017 - 18:54
அனைத்து அஞ்சல் தொடரூந்து சேவைகளும் ரத்து
1,314

Views
இன்று இரவு பயணிக்கவிருந்த அனைத்து அஞ்சல் தொடரூந்து சேவைகளும் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து கட்டுப்பாட்டு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொடரூந்து இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

தங்களது கோரிக்கை தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ் விதானகேவுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை தோல்வியடைந்தததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உரிய முறைமையை பின்பற்றாது தொடரூந்து உதவியாளர்களை சேவைக்கு இணைத்து கொள்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்காரணமாக இன்று அதிகாலை முதல் பல தொடரூந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தொடரூந்து நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நேர கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளன.

வேதன பிரச்சினையை முன்னிறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,639 Views
16,690 Views
1,792 Views
930 Views
15 Views
45,045 Views
Top