Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9
Thursday, 07 December 2017 - 20:07
பிரதான அரசியல் கட்சிகள் இன்று உள்ளுராட்சி தேர்தலுக்காக கட்டுப்பணத்தை செலுத்தின
105

Views
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக பிரதான அரசியல் கட்சிகள் இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெஹிவளை – கல்கிசை மாநகர சபை மற்றும் மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய நகர சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் க்ரேரு மற்றும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்ரிய ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பதுளை மாவட்டத்தின் பதுளை, லுணுகலை, எல்ல, மஹியங்கனை, ஹல்துமுல்ல ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

அத்துடன் ஹப்புத்தளை நகர சபை மற்றும பதுளை மாநகர சபைக்குமான கட்டுப்பணத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு செலுத்தியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை, சியம்பலாண்டுவ, பிபில ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.

அத்துடன் திம்புலாவல பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை ஐக்கிய தேசிய கட்சி நேற்று செலுத்தியிருந்தது.

பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட பிரதேச சபை மற்றும் அநுராதபுர மாவட்டத்தில் கல்நேவ பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டம் சார்பில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

அந்த அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் சுயேட்சை குழுவினர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

கரைச்சி, பூநகரி, பளை பிரதேச சபைளுக்கான கட்டுப்பணத்தையே குறித்த சுயேட்சை குழு செலுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,960 Views
13,631 Views
137 Views
6,353 Views
256 Views
7,865 Views
Top