Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81..
Friday, 08 December 2017 - 7:46
தொடரூந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது..
4,416

Views
தொடரூந்து இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
 
இதன்காரணமாக நேற்று முதல் இதுவரை சுமார் 276 தொடரூந்து போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
 
இயந்திர உதவியாளர்களை இணைத்து கொள்வதற்கான முறைமையை உரிய வகையில் அமுல்படுத்தாமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 
இது தொடர்பில் நேற்றைய தினம் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ் விதானகேவுடன் பேச்சுவார்தை ஒன்று நடாத்தப்பட்டது.
 
இந்த பேச்சுவார்தை வெற்றியளிக்காத நிலையில் தொடரூந்து இயந்திர சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது.
 
தங்களது கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,362 Views
7,795 Views
233 Views
3,548 Views
175 Views
34,635 Views
Top