Hirunews Logo
2018+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88
Friday, 08 December 2017 - 8:09
2018 பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு நாளை
62

Views
2018 பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
 
இன்றைய தினம் பௌத்தசாசன, அஞ்சல் - அஞ்சல் சேவை – முஸ்லிமம் விவகார, சுற்றுலா அபிவிருத்தி தகவல் தொடர்பாடல் மற்றும் எண்மான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
 
இதேவேளை, உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூல இரண்டாம் வாசிப்பு நாளை இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே, உள்ளுராட்சிமன்ற விஷேட திருத்தச் சட்டமூலத்திற்கு புதிய திருத்தங்களை முன்வைக்க வேண்டாம் என கோரி மகிந்த அணி சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
 
மகிந்த அணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்துடன் இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த சட்டத்தில் அடங்கும் விடயங்களில் மேலும் திருத்தங்களை முன்வைக்க அமைச்சர் பைசர் முஸ்தபா நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இதேவேளை, சுயநலத்தை புறந்தள்ளி மக்களுக்காக பணியாற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதாவது முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.
 
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
 
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் இன்னும் பல்வேறுபட்ட யுத்தத்தின் வடுக்களை சுமந்துக் கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
 
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர்.
 
அவர்களுக்கு கல்வி ராஜாங்க அமைச்சருடன் இணைந்து விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு அமைச்சர் பழனி திகாம்பரத்திடம் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
 
மலை நாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஊடாக இன்று மலையகத்தில் பல கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் குறிப்பிட்டார்.
 
சிங்களமும் தமிழும் ஆட்சி மொழி என ஒரே வாக்கியத்தில் அமையப்பெரும் வகையில் அரசியலமைப்பு மாற்றப்படும் என அமைச்சர் மனோ கணேஷன் உறுதியளித்தார்.
 
அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை மதித்து அவர்களுக்கு உரிய கௌரவங்களை வழங்க வேண்டும் என்று அமைச்சர் றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.
 
பதுளை மாவட்டத்தில் பல புதிய வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
535 Views
2,700 Views
3,071 Views
14,986 Views
33 Views
16,414 Views
Top