8 வருடங்கள் இந்திய பெண்ணை சித்திரவதை செய்த இலங்கை தம்பதிகள்!

Wednesday, 13 December 2017 - 16:07

+8+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
அவுஸ்திரேலியாவில் சுமார் எட்டு வருடங்களாக அடிமைப்படுத்தப்பட்ட இந்திய பெண் ஒருவர் அந்நாட்டு காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையை சேர்ந்த கண்ணன் மற்றும் குமுதினி தம்பதிகள் அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் வசித்து வந்துள்ளனர்.

அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் காணப்படுவதாக அவர்களை பராமரிக்க இந்திய பணிப்பெண் ஒருவரை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவரை சுற்றுலா வீசா மூலமாக அவுஸ்திரேலிய நாட்டிற்கு எடுப்பித்துள்ளனர்.

குறித்த பணிப்பெண் அழைத்துவரப்பட்ட தினத்திலிருந்து அதிகாலை 5.30 அளவில் நித்திரையிலிருந்து எழுப்பப்பட்டு நள்ளிரவு 12 மணி வரை பணியில் அமர்த்தி சித்திர வதை செய்துள்ளனர்.

இவ்வாறிருக்க கடந்த வாரம் அவர்கள் பிரிதொரு நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

ஆனால் குறித்த இந்திய பணிப்பெண்ணை அழைத்து செல்லாது வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த இந்திய பணிப்பெண்ணுக்கு உணவிற்கான ஆயத்தங்களும் செய்துக்கொடுக்கப்படவில்லை என்பதோடு உணவு சமைப்பதற்கான பொருட்களும் வழங்கப்படவில்லை.

உணவின்றி மூன்று நாட்கள் கழிந்த நிலையில் மயக்கடைந்ததுள்ளார்.

எனினும் அயலவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தாம் வீட்டுகாவலில் வைக்கப்பட்டுள்ளதை அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த யுவதி அவுஸ்திரேலிய காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த தொழில் தருனர்களான இலங்கையை சேர்ந்த கண்ணன் மற்றும் குமுதினி தம்பதிகளை கைது செய்துள்ளதுடன் நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips