கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டாட பாலஸ்தீனத்துக்கு உரிமை உண்டு: சவுதி மன்னர் அறிவிப்பு

Thursday, 14 December 2017 - 9:07

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%3A+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டாட பாலஸ்தீனத்துக்கு உரிமை உண்டு என சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்ஹஸீஸ்  அறிவித்துள்ளார்.
 
ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், சவுதி மன்னரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
குறித்த விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ள இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் மாநாடு துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரில் நேற்று  நடைபெற்றது.
 
1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 இஸ்லாமிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
 
இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய  பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் நீடிக்காத வரையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியோ, நிரந்தரத்தன்மையோ ஏற்படாது எனக் கூறியுள்ளார்.
 
அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கையை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டாட பாலஸ்தீனத்துக்கு உரிமை உண்டு என சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
 
இது முழுமையாக பாலஸ்தீனியர்களை சார்ந்த பிரச்சினை என்பதாலும், பாலஸ்தீனிய மக்களின் சட்டபூர்பமான உரிமைகள் என்பதாலும், கிழக்கு ஜெருசலேம் நகரை தங்கள் நாட்டின் தலைநகராக கொண்டாட பாலஸ்தீனத்துக்கு உரிமை உண்டு என சவுதி மன்னர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips