Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
Friday, 12 January 2018 - 21:10
மீண்டும் நாட்டை உலுக்கியுள்ள கொடூர சம்பவம்
22,485

Views
மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்புணர்வு 

14 வயதான சிறுமி பாலியல் வன்புணர்வு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காதலன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராம – கொனகமுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனை தாங்கிகொள்ள முடியாத அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதுடன் அவரது சகோதரர் அச்சிறுமியை காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமி ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை முயற்சிக்கு முன்னர் அந்த சிறுமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளதோடு அதில் குறித்த மூன்று இளைஞர்கள் தொடர்பிலும் வெளிப்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பத்தின் பின்னர் குறித்த மூன்று இளைஞர்களும் யால வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் பிரதேசவாசிகளால் நேற்று அதிகாலை மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களை பிரதேசவாசிகள் சரமாரியாக தாக்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான அந்த இளைஞர்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் தெபரவெவ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான காதலனுக்கு 23 வயது எனவும், மற்றைய இருவருக்கும் 18 மற்றும் 20 வயது எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அச்சிறுமியின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,524 Views
8,175 Views
959 Views
4,084 Views
70 Views
35,397 Views
Top