Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Saturday, 13 January 2018 - 13:35
சென்னையில் இன்று விமான சேவைகள் பாதிப்பு
1,047

Views
போகி பண்டிகை கொண்டாட்டத்தால் வெளியேறிய புகை மற்றும் அடர் பனிமூட்டம் என்பனவற்றினால், சென்னையில் இன்று விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
 
மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
 
அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்தனர்.
 
இதனால், எழுந்த கடும் புகையானது காற்றை மாசுபடுத்தி வருவதாகவும், 
 
சென்னையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, கடும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால், விமானங்கள் தரையிறங்க முடியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளதால், சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன
 
இன்று அதிகாலையில் சென்னை வந்த 12 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
 
அத்துடன், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய சுமார் 30 விமானங்கள் தாமதமாக செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,401 Views
7,873 Views
468 Views
3,667 Views
16 Views
34,808 Views
Top