Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
Saturday, 13 January 2018 - 13:07
இலங்கையின் பொருளாதாரம் சாதாரண நிலைக்கு
541

Views
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே, இலங்கையின் கூட்டணி அரசாங்கம் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் அரசாங்கம் அதிக கடன்களை செலுத்த வேண்டியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை தமது அபிவிருத்தி வேகத்தை தக்கவைத்துக்கொள்ள சவால்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முறையாக முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு சாதாரண நிலைக்கு திரும்புகிறது.

ஆனால்இ இந்த ஆண்டு 4.6 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்ற போதும், மத்திய வங்கியால் எதிர்வு கூறப்பட்ட 5 – 5.5 சதவீத வளர்ச்சியிலும் அது குறைவானதாகும்.

இந்த நிலையில் அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த, மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top