Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 13 January 2018 - 13:09
நிலவும் மழையுடனான காலநிலை தொடரும்
408

Views
நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 2 நாட்களுக்கு தொடரும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
 
 காலநிலை அவதான நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதன்பின்னர், நாட்டில் வரட்சியான காலநிலை ஏற்படும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
 
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் அதிகமான மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
 
அந்த மாவட்டத்தில் 118.3 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, திவுலப்பிடிய – கொடதெனியாவ பிரதேசத்தில் நேற்று வீசிய கடும் காற்று காரணமாக 300 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
 
இதனையத் தொடர்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,321 Views
7,716 Views
14 Views
3,431 Views
165 Views
34,453 Views
Top