Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21%21
Saturday, 13 January 2018 - 13:39
எச்சரிக்கை..!!
5,290

Views
எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடுமுழுவதும் குறிப்பிட்ட சில காலப்பகுதியில், மின்சார விநியோகத்தடை ஏற்படும் நிலைமையொன்று உள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை மின்சார சபையினால் இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
குறித்த காலப்பகுதியில், நுரைச்சோலை அனல்மின் நிலைய இயந்திரங்களின் பராமரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளது.
 
அதற்காக 45 நாட்கள் கால அவகாசம் அவசியம் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், நிலவும் மின்சார விநியோக பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், 100 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 
எனினும், தொழில்நுட்பக் குழுக்களில் பங்கேற்கும் பொறியலாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, நீர்மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கப் பகுதிகளில் எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரண்ட காலநிலை தாக்கம் செலுத்தும் என்று காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
 
இதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்சார நுகர்வோரிடம் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top