Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
Saturday, 13 January 2018 - 14:59
சென்னையில் இருந்து இலங்கைக்கான வானூர்தி சேவைகள் தடைப்பட்டுள்ளது
2,042

Views
சென்னையில் இருந்து இலங்கைக்கான வானூர்தி சேவைகள் தடைப்பட்டுள்ளதாக எமது வானூர்தி தள செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கமைய சென்னையில் இருந்து இலங்கை வரவிருந்த 2 வானூர்திகளின் பயணங்கள் தாமதமாகியுள்ளன.

அத்துடன் இலங்கையில் இருந்து சென்னைக்கு பயணிக்கவிருந்த ஸ்ரீ லங்கன் வானூர்தி சேவையின், 3 வானூர்தி சேவைகள் தாமதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொங்கல் பண்டிகையின் முதல் நாளில், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரியூட்டும் பண்டிகையான, போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.

இதன் காரணமாக வெளியேறிய பாரிய புகை, நிலவும் பனியுடன் கலந்தமையினால், வானூர்தி ஓடுப்பாதையில் தெளிவின்மை ஏற்பட்டது.

இதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சென்னையில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு செல்லும் வானூர்தி சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,726 Views
16,970 Views
12 Views
1,179 Views
84 Views
45,338 Views
Top