Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Saturday, 13 January 2018 - 15:47
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் - காணொளி
2,120

Views
தாயகத்தில் கையயளித்தும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 324 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைக்கு முன்பாக கதறியழுத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ் தேசியக்கூட்டமைபபின் பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களை காட்டி இவர்கள் துரோகிகள் எனவும் கதறியழுது மண்ணால் தூவியிருந்தனர்.

இதேவேளை, பதாதையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு அடித்தும் அதற்கு முன்பாக இருந்தும் ஒப்பாரி வைத்த தாய்மார் இவர்களாலேயே தமது பிள்ளைகள் வெளிவராமல் உள்ளனர் எனவும் தெரிவித்ததுடன்,ஜனாதிபதியின் சந்திப்பின்போது சுமந்திரன் எம்.பி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து கதறியழுததுடன் பல தாய்மார் மயக்கமுற்றும் வீழ்ந்தனர்.

இந் நிலையில் நாளைய தினம் பொங்கல் திருநாள் கொட்டாப்படவுள்ள நிலையில் தமது பிள்ளைகள் வருவார்களா என்ற ஏக்கத்தினையும் வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை நாளைய பொங்கல் கொண்டாட்டங்களை வீதியில் கொண்டாட வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

படையினர் வசமிருந்த 133.4 ஏக்கர் ஒரு தொகுதி காணிகள் கடந்த 28ஆம் திகதி விடுக்கப்பட்டது.

104 குடும்பங்களது 181 ஏக்கர் காணி விடுவிக்கப்படவில்லை என தெரிவித்து, கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 319 ஆவது நாளாக தொடர்கின்ற நிலையில், நாளைய தினம் கொண்டாடப்படும் பொங்கல் தினத்தை தாம் வீதியிலேயே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.





        
எமது பிராந்திய செய்தியாளர் ரூபன்
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top