அமெரிக்காக இலங்கைக்கு 18 கோடியே 30 லட்சம் ரூபா நிதி உதவி

Saturday, 20 January 2018 - 8:14

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+18+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+30+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
எதிர்வரும் 3 வருட காலப்பகுதியினில் சட்டவிரோத ஆட்கடத்தல் பணிகளுக்கு எதிராக 18 கோடியே 30 லட்சம் ரூபாவினை அமெரிக்கா வழங்க முன்வந்துள்ளது.
 
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க திணைக்கள பணியகம் இதற்கான நிதியினை வழங்குவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆள்க்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வோர் தொடர்பான விபரங்களை, சர்வதேசத்துடன் இணைந்து பெறுவதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களுக்கு உதவி வழங்க முடியும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அட்டுல் கெஷாப் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிதியின் மூலம் இலங்கையில் செயல்படும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை இனம் காண முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆள்கடத்தல் மூலம் பாதிப்படையும் இலங்கை ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கு நேரடியாக உதவ முடியும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips