11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் - 10 ஆவது சந்தேக நபரும் விளக்கமறியலில்

Tuesday, 23 January 2018 - 16:24

11+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+-+10+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
11 பேர் பலவந்தமாக கடத்தப்பட்ட காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள 10 ஆவது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய குறித்த நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை கடந்த 16 ஆம் திகதி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 ஆவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தின் பின்னணி....

16 January 2018 வௌியான செய்தி

11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 ஆவது சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய (16) தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றின் நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்க போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவை சேர்ந்த கஸ் தூரிகே காமினி 9 ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் டீ கே பி தசநாயக்க உள்ளிட்ட அறுவரை கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் பிணையில் விடுதலை செய்திருந்தது.

குறித்த அறுவர் சார்பிலும் மேல் நீதி மன்றில் மனு தாக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

கட்டளைத்தளபதி, சுமத் ரணசிங்க கடற்படை சிப்பாய்களான லக்ஷ்மன் உதயகுமார, நளின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக்க தர்மதாச, கித்சிறி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பமாளராகவும் கடற்படை ஊடகப்பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த டீ கே பி தசநாயக்க ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்னர்.

தலா ஒரு இலட்சம் ஷரூபா ரொக்க பிணையிலும், தலா 10 இலட்சம் ஷரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைளிலும் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றில் நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க உத்தரவிட்டார்.

சரீர பிணையாளர்களில் ஒருவர் அரச உத்தியோகத்தராகவும், இன்னுமொருவர் நெருங்கிய உறவினர் ஒருவராகவும் காணப்படுதல் அவசியம் என மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டி உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் சாட்சியாளர்களுக்கோ விசாரணைகளுக்கோ, இடையூறு விளைவித்தால் அல்லது விசாரணை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அது தொடர்பில் நீதிமன்றில் கவனத்திற்கு கொண்டுவரப்படும் பட்சத்தில் பிணை இரத்துச் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்க முடியும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட தனது பாதகாப்பு எத்தியோகத்தராக பதவி வகித்த காலப்பகுதியில் லெப்பிடினட் கொமாண்டர் சம்பத் முனசிங்சிஙற்கு எதிராக கொடும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றப்புலனாய்வு பிரிவு முன்னெடுத்த மேலதிக விசாரணைகளிலேயே இந்த கடத்தல் விவகாரம் அம்பலத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, கொட்டாஞ்சேனை தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க, உள்ளிட்ட பிரதேசங்களில் பல உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, கடந்த 2008 ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் 17 ஆம் திகதி பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரும் அவரின் வீட்டில் வைத்து ரஜுவ்நாகநாதன், பிரதீப் விஷ்வநாதன், திலகேஷ்வரன், இராமலிங்கம், மொஹமட் டிலான், மொஹமட் சாஜித், ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.

மேலும் கொட்டாஞ்சேனையை சேர்ந்த கஸ்த்தூரி ஆராச்சிலாகே ஜோன் ரீட் அரிப்பு பிரதேசத்தை சேர்ந்த அமலன் லியோன், மற்றும் ரொஷான் லியோன் கொட்டாஞ்சேனையை சேர்ந்த கஸ்த்தூரி ஆராய்ச்சி திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா கஜன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய சித்திரவதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப்புலனாய்வாரள்கள் கண்டு பிடித்தனர்.

இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன்ட் கொமாண்ட சம்பத் முனசிங்க கன்சைட் நிலத்தடி இரகசிய சித்திரவதை முகாமில் பொறுப்பாளராக அப்போது பதவி வகித்த லெப்டினன்ட் கொமாண்டர் தரத்தினையுடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நளின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக்க தர்மதாச, கித்சிறி மற்றும் டீ கே பி தசநாயக்க ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அத்துடன் சம்பத் முனசிங்கவிற்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரிதொரு சந்தேக நபரான லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்க திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட குறித்த 11 பேர் திருகோணமலை மற்றும் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களை விடுவிக்க கப்பம் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் அல்லர் என உளவு துறை அறிவித்துள்ளது.

விசாரணைகள் தற்பொழுது இறுதிகட்டத்தினை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதவிகள் இடைநிறுத்தப்படாத தசநாயக்க போன்ற அதிகாரிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையினால் அவர்கள் அதிகாரத்தினை பயன்படுத்தி அச்சுறுத்துவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாகவும் பிரதி மன்றாடியர் நாயகம் ஜனக்க பண்டார நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips