Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+
Tuesday, 13 February 2018 - 20:39
மகிந்த தலைமையில் விசேட குழு
7,582

Views
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆராய மகிந்த தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றது.

கொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியடைந்த உள்ளாட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட உள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனுடன் பொது தேர்தலை நடாத்த ஜனாதிபதி முன்வந்தால் அதற்கு தேவையான சட்டத்திருத்தங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
3,324 Views
5,481 Views
1,378 Views
347 Views
76 Views
29,625 Views
Top