Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88
Tuesday, 13 February 2018 - 21:32
நீர்வழங்கல் அமைச்சின் முன்னாள் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை
177

Views
நீர்வழங்கல் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் முன்னாள் செயலாளரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நில்வள கங்கை திட்டத்துக்காக ஒதுக்கிடப்பட்ட நிதியில், 400 கோடி ரூபாவை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படுவது தொடர்பில் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு, நிதி மோசடி விசாரணை பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நூற்றுக்க 5 வீத நிதியை அவர் முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாகவும், எனினும், ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னாள் செயலாளர் புறக்கணித்திருந்ததாகவும், நிதி மோசடி விசாரணை பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
565 Views
2,791 Views
3,174 Views
15,132 Views
161 Views
16,553 Views
Top