Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81
Tuesday, 13 February 2018 - 21:39
தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு காலக் கெடு
74

Views
தென்னாபிரிக்க ஜனாதிபதியை பதவி விலகுவதற்கு அந்த நாட்டு ஆளும் கட்சி காலக் கெடு விதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியாக ஜேக்கப் ஷூமா கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டுவருகின்றார்.

இவர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல்களில் ஈடுபட்டுவருவதாக தென் ஆப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் ஜேக்கப் ஷூமா 78 ஊழல் சம்பவங்களில் தொடர்புபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, தென்னாபிரிக்க நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லப் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த நிலையில், ஜெக்கப் ஷூமாவை பதவி விலகுமாறு அந்த நாட்டின் ஆளும் கட்சி வலியுறுத்தியுள்ள போதும், அவர் அதனை புறக்கணித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் வியாழக் கிழமைக்குள் ஜெக்கப் ஷூமா பதவி விலக வேண்டும் என ஆளும் கட்சி காலக் கெடு வித்தித்துள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
565 Views
2,791 Views
3,174 Views
15,132 Views
161 Views
16,553 Views
Top