Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+
Wednesday, 14 February 2018 - 19:45
சுதந்திர கூட்டமைப்பு எடுத்த அதிரடி முடிவு
25,327

Views
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனுடன் நாடாளுமன்றில் எதிர்வரும் இரண்டு நாட்களில் பெரும்பான்மை பலத்தை காட்டி ஆட்சியமைக்க தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படும் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

அதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் சுஸில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுடன், இன்றும் கலந்துரையாடியுள்ளனர்.

அலளிமாளிகையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில், ஆராயப்பட்டதாக சந்திப்பில் பங்கேற்ற கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும், இன்று பிற்பகல் இந்தச் சந்திப்புக்களை நடத்தியுள்ளன.

உள்ளுர் அதிகார சபைத் தேர்தல் நிறைவுபெற்றதை அடுத்து, இன்றைய தினம் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் பேசப்பட்டதாக, கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top