Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 14 February 2018 - 20:41
ஜனாதிபதி மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவு
227

Views
ஜனாதிபதி மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தாம் ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் இதனை தெரிவித்தாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், அவர்களால் ஜனாதிபதியுடன் எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கிடையிலான சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
5,997 Views
13,664 Views
12 Views
781 Views
169 Views
41,794 Views
Top