Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 14 February 2018 - 20:49
இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராகும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்
187

Views
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ 300 தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவர்களை முறியடிக்கத் தாம் தயாராக இருப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் இருந்து அண்மையில் காஷ்மீருக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் இந்திய இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் இந்திய இராணுவத்தினர் பலர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து 300 தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனைத் தடுத்து நிறுத்த இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதேவேளை, இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 192 பாகிஸ்தான் இராணுவத்தினர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top